குட்டி ராஜா

Construction for destruction ஆக்கங்கள் அழிவுக்கே

திருமங்கை மன்னன்

Get this widget | Share | Track details

நீண்ட குஞ்சி


எவ்வளவு நீண்ட முடி இச்சாதுக்கு

Labels:

விவேகானந்தரின் பிறந்த நாள்

"எழுமின்.....விழிமின்"

இந்தியாவின் பெருமையை உலகறியச் செய்த விவேகானந்தரின் பிறந்த நாள் இன்று
1863 ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி பிறந்தார்.

சிகாகோ சொற்பொழிவுகள்


1. வரவேற்புக்கு மறுமொழி
செப்டம்பர் 11, 1893
அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே!


இன்பமும் இதமும் கனிந்த உங்கள் வரவேற்புக்கு மறுமொழிகூற இப்போது உங்கள் முன் நிற்கிறேன். என் இதயத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. அதனை வெளியிட வார்த்தைகள் இல்லை. உலகத்தின் மிகப்பழமை வாய்ந்த துறவியர் பரம்பரையின் பெயரால் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். அனைத்து மதங்களின அன்னையின் பெயரால் நன்றி கூறுகிறேன். பல்வேறு இனங்களையும் பிரிவுகளையும் சார்ந்த கோடிக்கணக்கான இந்துப் பெருமக்களின் பெயரால் நன்றி கூறுகிறேன்.

இந்த மேடையில் அமர்ந்துள்ள பேச்சாளர்களுள் சிலர் கீழ்த்திசை நாடுகளிலிருந்து வந்துள்ள பிரதிநிதிகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, 'வேற்று சமய நெறிகளை வெறுக்காத பண்பினைப் பல நாடுகளுக்கு எடுத்துச் சென்ற பெருமை, தொலைவிலுள்ள நாடுகளிலிருந்து வந்துள்ள இவர்களைத்தான் சாரும்' என்று உங்களுக்குக் கூறினார்கள். அவர்களுக்கும் என் நன்றி. பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல், அவற்றை எதிர்ப்பு இன்றி ஏற்றுக் கொள்ளுதல், ஆகிய இரு பண்புகளை உலகத்திற்குப் புகட்டிய மதத்தைச் சார்ந்தவன் நான் என்பதில் பெருமை அடைகிறேன். எதையும் வெறுக்காமல் மதிக்க வேண்டும் என்னும் கொள்கையை நாங்கள் நம்புவதோடு, எல்லா மதங்களும் உண்மை என்று ஒப்புக் கொள்ளவும் செய்கிறோம். (ஒரு பகுதி மட்டும்).
கம்பரைப் பற்றிச் சொல்லும் பொழுது சடையப்பவள்ளலைப் பற்றியும் சொல்லித்தானே ஆகனும் அது போல.

இந்தியாவின் பெருமையை உலகறியச் செய்தவர் சுவாமி விவேகானந்தர் என்றால் விவேகாந்தரை உலகறிய செய்தவர் பாஸ்கரசேதபதியே ஆவார். 1893 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற அனைத்து சமயங்களின் மாநாட்டில் தான் கலந்து கொள்வதாக இருந்த முடிவை மாற்றி விவேகானந்தரை அங்கு அனுப்பி வைத்தது மட்டுமின்றி அவர் 4 ஆண்டுகள் அங்கு தங்கி இந்து மதத்தின் அருமை பெருமைகளை உலகளவில் பறை சாற்றி விட்டு வருவதற்கு உதவி புரிந்தவர் இவர்! விவேகானந்தர் தாயகம் திரும்பிய போது தாயகத்தில் பதிக்கும் முதல் காலடி, என் தலை மீது தான் இருக்க வேண்டும் என வேண்டி, அத்துறவியின் பாதத்ததை தன் தலையில் தாங்கியதோடு அவரை ரதத்தில் வைத்து ஊர்வலமாக அழைத்து சென்று அந்த ரதத்தை தானெ இழுத்து சென்ற அரச பெருமான் அவர். விவேகானந்தர் கால் பதித்த இடத்தில் கல்வெட்டு ஏற்படுத்தி அதில் அன்று அவர் பொறித்த "சத்திய மேவ ஜெயதே"(வாய்மையே வெல்லும்) இன்றும் இந்திய அரசின் தேசிய வாசகமாக உள்ளது!
ஒரு நாட்டின் மன்னர் ஒரு துறவிக்கு கொடுத்த மரியாதை அது.
நாம் கொடுக்கும் மரியாதை இன்று அவர் பிறந்த நாளில் அவரை நினைத்துப் பார்ப்பது.

ஒலி விவேகானந்தர்


எழுத்து வடிவம்

சதாம் தூக்கு


பாக்தாத் : ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனின் தூக்கு தண்டனை இன்று காலை 8.30 மணி அளவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈராக் தொலை காட்சி நிறுவனம் அல் ஹுரா செய்தி வெளியிட்டுள்ளது.

ஈராக்கில் துஜெயில் என்ற இடத்தில் 1982ம் ஆண்டு ஷியா பிரிவு முஸ்லிம்கள் 148 பேரை படுகொலை செய்த வழக்கில் சதாம் உசேன், அவரது சகோதரர் பர்சான் அல் திக்ரிதி, முன்னாள் தலைமை நீதிபதி அல்பந்தார் அல் சதூன் ஆகியோருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
எல்லா ஊர்களிலும் தூக்கில் போடப்படுபவர்களுக்கு தான் முகத்தை மூடுவார்கள் ஆனால் இங்கு தூக்கில் ஏற்றும் பணியாளர்களுக்கு முகத்தை முடியுள்ளார்கள்.

இன்று சுனாமி நாள்

இன்று சுனாமிநடைபெற்ற நாள்

இதற்குமுன் இவ்வாறு நடந்ததா? ஆம் நடந்தது !!! இமயமலைகூட ஒரு காலத்தில் தண்ணீருக்குள் இருந்ததாம் அரியலூர் பகத்திலுள்ள ஊர்களும் ஒரு காலத்தில் கடலால் முழ்கப்பட்டிருந்தது அதற்கான தடயங்கள் இன்றும் உள்ளன.


பல்வேறு ஊழிகளிற்றோன்றிய கடற் பெருக்குகளால் நிலப்பரப்பு நீர்ப்பரப்பாகவும், நீர்ப்பரப்பு நிலப்பரப்பாகவும் மாறுதலடைந்ததுண்டு. இம்மண்ணகம் பல்வேறு காலங்களில் அடைந்திருந்த வடிவங்களை நிலநூலார் தமது உய்த்துணர்வுகொண்டு படங்களமைத்துக் காட்டியிருக்கின்றனர்.

ஸ்காட் எலியட் என்பவர் இவ்வுலகில் ஐந்து பெருங்கடற்பெருக்குகள் உண்டாயினவென்றும், அவற்றுள் முதலாவது பதினாயிரம் நூற்றாண்டுகளுக்கு முற்பட்டதென்றும், இரண்டாவது எண்ணூறாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதென்றும், மூன்றாவது இருநூறாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதென்றும், நாலாவது எண்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதென்றும், ஐந்தாவது கி.மு. 9564இல் உண்டானதென்றும் குறிப்பிட்டிருக்கின்றனர். இப்போது அட்லாண்டிக் கடல் அலைகொழிக்கின்ற இடத்தில் முன் ஒரு பூகண்டம் விளங்கியது. அப்பூகண்டம் கடலுள் மூழ்கிப்போக அதில் மிச்சமாக விளங்கிய பொசிடோனிஸ் (Posedonis) என்னும் தீவு கி.மு. 9564ஆம் ஆண்டில் உண்டான வெள்ளத்தால் மறைந்ததெனச் சொல்லப்படுகின்றது. இதற்குச் சான்று இலண்டன் நூதனப் பொருட்காட்சிச் சாலையிலே உள்ளதும் 3500 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டதுமாகி (Troano Mss.) தொறானோ கையெழுத்துப் பிரதியில் இருப்பதை ஸ்காட் எலியட் என்பவர் எடுத்துக் காட்டியிருக்கின்றனர். அதன் மொழிபெயர்ப்பு வருமாறு:-

"ஆறாவது கான் ஆண்டில் 11ஆவது மலுக்கில் சாக் என்னும் திங்களில் அங்கு மிகவும் கடுமையான பூகம்பம் உண்டாய்ச் சூன்

திங்கள் 13ஆம்நாள் வரையும் நீடித்தது. இதன் விளைவாகச் சேற்றுமலைகளிலுள்ள நாடுகளும், மூவென்னும் தரையும் மறைந்தன. இப்பகுதிகளின் அடித்தளங்கள் எரிமலை அதிர்ச்சியினால் இடைவிடாது ஆட்டி அலைக்கப்பட்டு இருமுறை மேலே எழுந்து சடுதியில் இராக்காலத்தில் மறைந்துபோயின. இக்குழப்பங்கள் இன்னும் நிலைத்தமையால் பல இடங்களில் பல முறைகளில் நிலங்கள் எழுந்தும் மறைந்தும் போயின. இறுதியில்

நிலம் வெடித்தமையால் பத்து நாடுகள் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கப்பட்டன. இந் நடுக்கத்தைப் பொறுக்க முடியாமையால் அந்நாடுகள் 64,000,000

மக்களுடன் இந்நூலெழுதுவதற்கு 8060 ஆண்டுகளின் முன் ஆழ்ந்துபோயின." என்றுகூறுகின்றார்.

என்னமோ அந்த ஆண்டவனுக்குத்தான் தெரியம் எது எப்பொழுது நடக்கும் என்று.

அதிவேக விமானம்







இரவு மற்றும் பகலை வரையறுக்கும் கோட்டினை (Terminator) வேகத்தால்
வெல்லக்கூடிய தன்மை கொண்ட பயணிகள் விமானம் என்று சொல்வதற்கு ஒரே விமானம் தான் இருந்தது.... காண்காட்!

இந்த தன்மை உள்ளதால், மாலையில் லண்டனிலிருந்து புறப்பட்டு மேற்கு திசையில் அமெரிக்காவை நோக்கி பறக்கும் காண்காட் சூரியனை பின் தொடர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தது.

அ°தம சூரியனுடன் பயணம் செய்து பயணத்தின் இறுதியில் சூரியனும் காண்காடும் ஒரே நேரத்தில் அமெரிக்காவில் சென்று சேரும்போது அமெரிக்க மக்களுக்கு அது உதய சூரியன்!

1986 நவம்பர் 1-ம் தேதி ஒரு காண்காட் விமானம் 32 மணி நேரம் கொண்டு பூமியை ஒரு தடவை வலம் சுற்றியது வரலாறு சம்பவம்!

1950 காலகட்டத்தில் விமானம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தில் அமெரிக்காவும் ரஷ்யாவும் தான் முன்னணியில் இருந்தார்கள்.

இந்த சூழ்நிலையில் பிரிட்டனும் பிரான்சும் இணைந்து வடிவமைத்தது இந்த அதிசய விமானத்தை.

இதற்கென்று அந்த இரண்டு நாடுகள்க்கிடையே ஒரு ஒப்பந்தம் இருந்தது.

அதிகமான சத்தம் போன்ற பல்வேறு காரணங்களால் மற்ற நாடுகள் இந்த விமானம் வாங்குவதற்கு முன் வரவில்லை.

ஒரு விஷயத்தை மட்டும் அந்த காலத்தில் அவர்களால் சரியாக கையாள முடியாமல் போனது. இந்த விமானத்தின் இயந்திரம் இயங்கும்போது வெளி வரும் ஒலியை குறைப்பதற்கான முயற்சிகள் வெற்றி பெறவில்லை.

ஜெட் ரக இயந்திரங்களின் ஒலி 150 டெசிபல் என்ற அளவில் இருந்தபோதும் கூட காண்காட் விமானத்தின் இயந்திரம் இயங்கும்போது வெளிவரும் சத்தம் 200 டெசிபெல் அளவில் இருந்தது.

இதே காரணத்தால் பல்வேறு நாடுகள் காண்காடை வரவேற்கவில்லை. மலேஷியா நாடு காண்காட் ரக விமானங்கள் அந்த நாட்டு வான்வெளிப்பகுதியில் பறப்பதற்கும் கூட தடை விதித்தது.

கடைசியில் பிரிட்டனின் பிரிட்டீஷ் எயர்வேஸும், பிரான்சின் எயர் பிரான்சும் சேர்ந்து இந்த விமானங்களை வைத்து சேவை புரிந்து வந்தார்கள்.

60,000 அடி உயரத்தில் ஒலியைவிட அதிகமான வேகத்தில் பறந்து செல்லக்கூடிய சக்தி வாய்ந்த இந்த காண்காட் ரக விமான தயாரிப்பு மற்றும் சேவைகள் 2003 ம் ஆண்டிலிருந்து நிறுத்தப்பட்டது.

மொத்தம் 20 காண்காட் விமானங்களை தயாரித்து, 26 ஆண்டுகள் சேவை புரிந்த காலையளவில் ஒரே ஒரு காண்காடு விமானம் மட்டும் தான் விபத்துக்கு உள்ளானது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பிரான்சில் உள்ள ஒரு விமான நிலையத்திலிருந்து பறந்து உயரும் காண்காடின் டயரில், காண்காட் புறப்படுவதற்கு சற்று முன் தறையிறங்கிய இன்னும் ஒரு விமானத்திலிருந்து ஊர்ந்து விழுந்த ஒரு டைட்டானியம் கம்பி குத்தி டயர் பஞ்சராகி விட்டது, மேலும் எரிபொருள் டேங்க் சேதம் அடைந்ததால் பறந்து உயர்ந்த சில நொடிகளில் அந்த விமானம் பற்றி எரிந்தது.

இந்த விமான சேவை நிறுத்துவதற்கான முக்கிய காரணம் அதன் சத்தம் தான். சத்தம் என்றால் அது வெறும் சத்தம் அல்ல! இயற்கையின் இடியை வெல்லும் தனி காண்காட் இடிமுழக்கம் !

ஒரு தடவை ஒரு காண்காட் விமானம் தில்லி விமான நிலையத்தில் தறையிறங்கியபோது அந்த விமான நிலையத்தில் மட்டுமல்லாமல் வெளியே கண்ட்ரோல் டவர் மீதுள்ள கண்ணாடி ஜன்னல்கள் அத்தனையும் நொறுங்கி விட்டது!

காண்காட் ஒலியைவிட இரட்டை வேகத்தில்

Supersonic


பயணம் செய்யும்போது அந்த விமானத்தின் பாதையில் செயற்கை மேகங்களே உருவாகும் நிலைமை இருந்தது.

விமான சேவை துறையில் என்ன தான் புரட்சிகள் வந்தாலும், காண்காடுக்கென்று ஒரு தனி இடம் வரலாற்றில் உண்டு.

விடைபெற்றது சாதாரண விமானம் அல்ல - விமானங்களின் பேரரசர்!
சுட்ட இடம்
http://www.webulagam.com/news/history/0605/19/1060519011_1.htm

மன்னர்கள்






























































மேலுள்ளவர்கள் அனைவரும் மன்னர்களாக இருந்தவர்கள் கையில் தடியுடன் இருப்பவர்களும் மன்னர்களாக இருந்தவர்கள்தான்.
http://freepages.genealogy.rootsweb.com/%7Eroyalty/files/Piclist5.html